அமைதியான இடத்தினிலே முருகன் இருக்கின்றான்
மலையிலிருந்து கடைகண்ணால் பார்த்து ஆசியை வழங்குகின்றான்
அவன் தந்தையும் அவனை தினமும் இல்லதிலிருந்து பார்கின்றான்
அன்னையும் தன்னை பார்பதை கண்டு மனதால் மகிழ்கின்றான்
தொண்டு செய்ய மனதில் எண்ணம் முதல் படியாகும்
அதற்கு தேவையான பொருள்களை சேர்பது இரண்டாவது படியாகும்
அமைதியாய் அமர்ந்துதொண்டு செய்வது மூன்றாம் படியாகும்
அவன் ஆசியை வேண்டி அவன் திருவடி தொழுவது நாலாம் படியாகும்
உலக பொருட்கள் என்றும் தெய்வத்தை சிந்திக்க விடுவதில்லை
சிந்திக்க ஆசை இருந்தாலும் மனம் இடம் கொடுப்பதில்லை
மனம் இடம் கொடுத்தாலும் செல்வத்தின் பற்று அவனை விடுவதில்லை
அவன் மனம் வைத்தால் அவன் சிந்தனை வரும் இதில் சந்தேகமில்லை
அன்பு, அறிவு அவன் அருள் இருந்தால் அதுவே பெரும் ஸ்வர்கம்
அவன் இருக்கும் இடத்தில் கவலை துன்பங்களுக்கேது இடம்
இதயமே இறைவன் என்றும் நம்முடன் இருக்கும் புனித இடம்
இதை அறிந்து அவனை வழிப்பட்டால் வாழ்க்கை புனிதம் ஆகிவிடும்
=================================================
பட்டீச்வரம் சிவன்.
================
அமைதியே உருவான அம்பிகாபதியே
அமைதியுடன் அமர்ந்த உன்னை கண்டேன்
வெயில் குளிர் மழை என்று பாராமல்
ஆனந்தமாய் அமர்ந்திருக்கும் உன்னை கண்டேன்
மருதமலையில் குடிகொண்ட முருகனும்
யானைமுகனும் மலைமுருகனும் உடநிருக்க
மலையிலிருந்து இரங்கி வந்து
மனிதரை காக்க வந்த உன்னை கண்டேன்
இன்பமும் துன்பமும் எது வந்தாலும்
சமத்துவம் பின்பற்றவேண்டும்
என்னும் தத்துவத்தை தியாகத்தின் மூலம்
உணர்த்தும் பரமசிவனே உன்னை கண்டேன்
உனக்கு தொண்டு செய்ய வலிமை தேவை
என்று அறிந்து உணவளித்தாய்
உணவோடு உன் நினைவும் நிரந்தறமாய் இருக்க
உன்னை அடையாளம் காட்டிய
உமாபதியே உன்னை வணங்குகின்றேன்
===============================
ஶ்ரீ ஆதியொகிம் பஜேஹம்
ஆபத்பாந்தவம் ஆஶ்ரித ரக்ஷகம்
ஆயு ஆரோக்ய ப்ரதாயகம்
ஆராதக பக்தஜன ஸாயுஜ்ய தாயகம்
ஸமசித்த ஸ்திதி ப்ரதர்ஷகம்
ஸமான ரூபேண சுக துக்க ப்ரதாதம்
ஸகல ஸமயே ஸம சித்த போதகம்
ஸம்ஸார மத்யே ஸமானதா ப்ரஸாரகம்
ஸஸ்ய ஷ்யாமல ப்ரக்ருதி மத்யே ஸுஷோபிதம்
லிங்க பைரவி சன்னிதி க்ஷேத்ரே த்யான அனுபவ ப்ரதாயகம்
ஸத்குரு க்ருத சேவா ப்ரதிநித்ய ஸ்வீக்ருதம்
விராக ஸமேத விஹார வர ப்ரதாயகம்
மனமந்திரே சதா நிவஸிதம்
மன முத ஹர்ஷ ஆனந்த ப்ரதாயகம்
மருத மலை முருக கஜமுக சங்கர
பக்த வ்ரும்த கல்யான தாயகம்.
----------------------------------------------------------
ஶ்ரீ வாராஹீம் பஜேஹம்
சந்த்ரசேகர மனோபாமினீம்
ராஜராஜேஷ்வரீம் ரவி ஸமான தேஜம்
ஸௌம்ய வதனேன மந்தஹாஸ ப்ரகடிதம்
விஜய வித்த விவேக வரப்ரதாயிநீம்
சரணாகத பக்த ஜன ரக்ஷகீம்
விபுல ரூபேண அத்யாத்ம வர ப்ரதாயினீம்
ஆவந்திகா பகுள கமல புஷ்ப பூஜாப்ரியம்
ஸித்தார்த ஸமான ஸமத்வ ப்ரதாயினீம்
அர்ஜுன க்ருத ஸமரே விஜய ப்ரதாயினீம்
ஈஷ்வர ஆராதனே ப்ரதிநித்ய ஹர்ஷிதம்
ஷோபாயமான க்ருஹே ஆனந்த ப்ரதாயகம்
=================================
குக்கே க்ஷெத்திரத்தில் இருக்கும் ஶ்ரீ சுப்பிரமண்யா
கருணையுடன் பக்தர்களை காக்க நீ இங்கு வந்தாயோ
செட்டாநகரத்தின் அழகை கண்டு மயங்கி
உன் திருவடி போற்றும் பக்தர்களை காக்க வந்தாயோ
வட நாட்டின் மக்கள் குறையை தீர்க வந்தாயோ
ஶ்ரீ நரஸிம்ஹரை ‘நித்தியம் போற்றும் குருவின்
வேண்டுதலுக்கிணங்கி வந்தாயோ
நாதலோலனே நாதப்ரியனே பல சேவைகளை ஏற்க வந்தாயோ
அழகே உருவான அம்பிகாசுதனே
உன் அபிஷேகம் அர்சனை கண்களுக்கு விருந்து
பாயஸான்ன ப்ரியனே உன் ப்ரசாதம் பசியை போக்க சாதனமே
மின்னல்ப்போலே ஜொலிக்கும் ஆரத்தியில் காணும் தேவனே
வணங்குகின்றேன்
ஆயுள் நலம் மங்களம் அளித்து என்றும் காக்க
வெண்டுகின்றேன்
=================================
எப்படி புகழ்வேனோ உன்னை எப்படி புகழ்வேனோ
எப்படி புகழ்ந்தாலும் அது குறையாகும்
சொல்லுக்கு விளக்க வலிமை உண்டோ
குமாரதாரா கரையில் ‘நின்றாய்
குக்கே சுப்ரமண்ணியா எனும் பெயர் கொண்டாய்
வா என்று உன்னை அழைத்தால் போதும்
விறைந்தோடி வந்து காத்திடுவாய்
கருணை தெய்வமே கடற்கறையில்
குடிகொள்ள முடிவு செய்தாய் அன்று
ஶ்ரீ நரஸிம்ஹரை தொழும் குரு அன்று
நீ இங்கிருக்க நினைத்தாராம்
உந்தன் அழகு மனதை கவரும்
உன் சேவைகள் கண் குளிர செய்யும்
உன்னை பக்தியுடன் தொழும் பக்தர்களுக்கு
உன் அருள் நிச்சயமாய் கிடைத்துவிடும்
================================
சரவணனே வந்தாயோ ஸ்வாமி சரவணனே வந்தாயோ
பக்தர்களை காக்க நீ வந்தாயோ
பக்திக்கு மயங்கி வந்தாயோ
செம்பூரில் இருக்கம் அழகு சுப்ரமண்ணியா
அழகில் உன்னை மிஞ்ஜுவது யார்
பக்தியுடன் உந்தன் தொண்டை செய்தால்
பக்தர்களை அன்போடு போற்றிடுவாய்
ப்ரஹ்லாத வரதனை தினமும் போற்றும்
குரு இன்று நினைக்கயிலே
யானைமுகன்சோதரனே அவர் உன்னை இங்கு வைத்து
பார்த்து ஆனந்தம் கொண்டார்
கண்ணன் இங்கு உன்னோடு குடிகொண்டிருக்க
ஶ்ரீ ராகவேந்திரர்துணை இருக்க
மாதவன் மஹதேவ மைந்தன் கூட இருக்க
மனதிற்கு இன்பம் தான் வந்தது
உன்னை தினம் காணும் வாய்ப்பை தருவாய்
உன் தொண்டை செய்யும் புண்ணியம் தருவாய்
உன் அனுக்றஹம் வரமாய் தருவாய்
உன் சிந்தனை சேவை நிறந்தரமாய் தருவாய்
================================
==============================
வந்தான் அவன் வந்தான் நம் பார்வதியின் மைந்தன்
தந்தான் அவன் தந்தான் மனதிற்கு இன்பம் தந்தான்
நின்றான் அவன் நின்றான் இன்று நம் எதிரில் நின்றான்
அழகன் அவன் அழகன் அவன் உலகிலெயே பேரழகன்
இங்கு வருகின்ற பக்தர்களுக்கு அபயம் அளிப்பேன் என்றான்
எனக்கு தொண்டு செய்யும் பக்தர்களுக்கு பயம் எங்கே என்றான்
அபிஷேகம் அர்ச்சனை அராதனைகள் எனக்கு ப்ரியம் என்றான்
பக்தியுடன் எதை அளித்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் எண்றான்
அன்று குரு கண்ட கனவு ‘நினைவானது இன்று
அழகன் முருகன் அமர்ந்து ஆசியை அளிக்க
பார்வதிதனயா காப்பாய் என்றழைக்க விறைந்து ஒடி வருவான்
தாய் தன் சேயை அணைப்பது போலே ஓடிவந்து காப்பான் கந்தன்
நான் அவனுக்கு என்ன கொடுப்பேன் அவனோ செல்வந்தன்
தந்தைக்கு ப்ரணவத்தின் பொருளை சொன்ன அவனோ பெரறிஞன்
உலக பற்றை நீக்கி பக்தியை அளிக்கும் அவனோ தேவர்கள் தலைவன்
அவன் திருவடி தொழுது அவன் நல்லாசி பெருகின்ற பக்தனே தான் உயர்ந்தவன்
=====================================================================