Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Wednesday, July 30, 2008

ஸ்ரீ ஸ்ரீனிவாசன்

பாலத்தில் தண்ணீர் தெரிகின்றது
அங்கு வெள்ளை கோவில் இருக்கின்றது
உடலும் உள்ளமும் செல்கின்றது
அங்கு இறைவனை காண துடிக்கின்றது
திருமலைவாசனை பார்கின்றது
உலக கவலைகளை மறைக்கின்றது
வாயில் வார்த்தை நிர்கின்றது
ஆனந்தம் கண்ணீரில் தெறிகின்றது
கைகள் பக்தியுடன் இணைகின்றது
இதயம் அமைதியை பெறுகின்றது
இறைவன் ஆசியை கேட்கின்றது
இனி வேறேதும் தேவைஇல்லை என்கின்றது
மற்ற தெய்வமும் இருக்கின்றது
ஓரே இடத்தில் அருள் கிடைக்கின்றது
கடல் தாண்டும் பக்தரையும் காக்கின்றது
கலியுக வரதனின் அன்பென்பது
அவனுக்கு தெரியாது பேதம் என்பது
அதனாலேதான் அவனை தெய்வம் என்பது
அவன் அறிந்தது ஒன்றே அருள் என்பது
அதை அடைந்தவர் வாழ்வே சுவை என்பது

Saturday, March 22, 2008

முருகா

கிருஷ்ணனின் சோதரனே வேல் முருகா
கமலக்கண்ணனே வேல் முருகா
ரமணீய ரூபம் கொண்ட வேல் முருகா
ராஜாதிராஜனே வேல் முருகா
மணிகண்டன் சோதரனே வேல் முருகா
கீத பிரியனே வேல்முருகா
ராமனின் தம்பியே வேல் முருகா
சுபமான வரங்கள் அளிக்கும் வேல் முருகா
ரிஷி முனிகள் போற்றும் வேல் முருகா
ஜெயத்தை அள்ளித்தரும் வேல் முருகா
அசோகத்தின் உருவமே வேல் முருகா
அஜேய வீரனே வேல் முருகா
லாவண்ய ரூபனே வேல் முருகா
ஆதித்ய தேஜனே வேல்முருகா
அருணகிரிநாதர் போற்றும் வேல் முருகா
கிரிஜையின் புதல்வனே வேல் முருகா
சித்திகள் அர்த்தம் நீயே வேல் முருகா
சத்தியத்தின் பொருளே வேல் முருகா
சாரதியும் நீயே வேல் முருகா
எழுதிய பாடலெல்லாம் வேல் முருகா
உன்தன் கருணையின் வரமே வேல் முருகா

சதாசிவா

தண்ணீரில் அமர்ந்த சதாசிவா
தலை வணங்கி உன்னை வணங்குகின்றேன்
தவம் செய்ய வலிமை இல்லை சதா சிவா
திருப்பாதம் பணிவோம் சதாசிவா
அமைதியின் உருவமே சதாசிவா
அம்பிகையின் அரசனே சதாசிவா
அடைக்கலம் நீயே சதாசிவா
ஆடலரசனே சதாசிவா
கங்கையை போலே சதாசிவா
கருணை வெள்ளமே சதாசிவா
குழந்தை செல்வத்தை அளித்தாய் சதாசிவா
குலவிலக்கை ஏற்றினாய் சதாசிவா

சமயபுரி அம்மன்

சமயம் இது சமயம்
அன்னையை காணும் சமயம்
சமயம் இது சமயம்
அன்னை அருளும் சமயம்
சமயம் இது சமயம்
வாழ்வில் புனித சமயம்
சமயம் இது சமயம்
வாழ்த்து கிடைக்கும் சமயம்
சமயம் இது சமயம்
ஆலய வழிபாடு சமயம்
சமயம் இது சமயம்
ஆனந்தம் பொங்கும் சமயம்
சமயம் இது சமயம்
வாரிசை வேண்டிடும் சமயம்
சமயம் இது சமயம்
அன்னை வாரி வழங்கிய சமயம்

விக்னேச்வரா

மலைமேல் குடிகொண்ட விக்னேச்வரா
மன்னித்து காப்பவனே விக்னேச்வரா
மனதினில் நின்று விட்டாய் விக்னேச்வரா
மலர்களினால் பூஜை செய்வேன் விக்னேச்வரா
ஏறுவது கஷ்டம் விக்னேச்வரா
ஏக்கம் ஒன்று இருந்தால் போதும் விக்னேச்வாரா
ஏற்றி வைப்பது கடமை விக்னேச்வரா
ஏறி வந்து பணிவேன் ஐயா விக்னேச்வரா
எங்கள் குலத்து விளக்கை ஏற்ற விக்னேச்வரா
ஏங்கி வேண்டி வந்தோமே விக்னேச்வரா
ஏற்றுக்கொண்டாய்விண்ணப்பத்தை விக்னேச்வரா
ஏற்றுக்கொண்டு நன்றி சொல்வோம் விக்னேச்வரா

திருச்சி தெய்வங்கள்

சக்தி என்ற பெண் ஒருத்தி எங்கள் வீட்டில் இருந்தாள்
சிறந்த அன்பு அறிவு பண்பு நற்குணம் பெற்றிருந்தாள்
எந்தன் பெண்ணின் தோழியாக அவள் கூட இருந்தாள்
மனதினிலே மறக்காத நட்பின் கொடியை வளர்த்தாள்
உச்சி பிள்ளையார் இருக்கும் ஊரிலிரிந்து வந்தாள்
சமயப்புரத்து அம்மனைப்போல் சமயத்திற்கு விலை தந்தாள்
உறங்கும் ரங்கனாதனைப்போல் அமைதி கொண்டாள்
தண்ணீர் நடுவில் இருக்கும் சிவனை ப்போல் சாந்தம் கொண்டாள்
அவள் இன்று மணந்து வாழ கடலை தாண்டி வந்தாள்
முருகுன் இருக்கும் இடத்தினிலேயே தானும் குடி கொண்டாள்
என் மகளும் அவளை காண அன்று விரைந்து சென்றாள்
அங்கு இருக்கம் முருகன் அருளால் மகளும் தாய்மை கொண்டாள்

ரத்னகிரி முருகன்

ரத்னகிரிக்கு நான் வந்தேன்
உன்னை காண மலையேறி வந்தேன்
அழகனே உன்னை நான் கண்டேன்
அடியேன் முறையிட நான் வந்தேன்
மயில் வாகனனே நான் வந்தேன்
மனமார பாடவும் நான் வந்தேன்
மனைவி மக்களுடன் நான் வந்தேன்
முத்தமிழ் அரசனே நான் வந்தேன்
பிள்ளையார் சோதரனே நான் வந்தேன்
பிள்ளை செல்வம் கேட்க நான் வந்தேன்
பிரிவின் வேதனை மீட்க நான் வந்தேன்
உன் வரத்திற்கு நன்றி சொல்ல நான் வந்தேன்

௨௧ காசி விசாலாக்ஷி

எங்கே கங்கை பெருகுகின்றதோ
எங்கே சிவன் பெயர் கேட்கின்றதோ
எங்கே புண்ணியம் கிடைக்கின்றதோ
அங்கே விசாலாக்ஷி காட்சி தருவாள்
எங்கே முன்னோர்கள் காரியம் நடக்கின்றதோ
எங்கே அவர்களுக்கு ஸ்வர்க்கம் கிடைக்கின்றதோ
எங்கே அவர் ஆசி பலன் தருகின்றதோ
அங்கே விசாலாக்ஷி காட்சி தருவாள்
எங்கே கருணை மழை பொழிகின்றதோ
எங்கே கல்வி பருவுகின்றதோ
எங்கே அவள் ஆட்ச்சி நிலைக்கின்றதோ
அங்கே பிள்ளை செல்வம் அவள் அளிப்பாள்

Friday, March 21, 2008

௨0.காஞ்சி காமாக்ஷி


கோவில் நகரம் கண்டீர்களா
அங்கு காஞ்சி பெரியவரை கண்டீர்களா
விஜயேந்த்ரர் ஜெயேந்த்றரை கண்டீர்களா
எகாம்பறேச்வறரை கண்டீர்களா
உலகளந்த பெருமாளை கண்டீர்களா
அன்னை காமாக்ஷியை கண்டீர்களா
கருணையின் வடிவத்தை கண்டீர்களா
கண்போலே காப்பவளை கண்டீர்களா
பிறவியிலிருந்து காப்பதும் அவளே
பிழைகளிலிருந்து மீட்பவளும் அவளே
பிறருக்கு நல்லதை செய்யும் பக்தரை
பிள்ளை செல்வம் தந்து அருள்பவள் அவளே

௧௯.மதுரை மீனாக்ஷி

சுந்தரேச்வறரை மணந்தவளே
சுந்தர நகரத்தில் நிற்பவளே
சுத்தமான தவத்திற்கு அருள்பவளே
சுலபமாய் வரத்தை கொடுப்பவளே
எத்தனை பெரியது உன் கோவில்
எத்தனை பெரியது உன் உள்ளம்
அத்தனை பக்தர்களையும் வரவேற்பாய்
வேண்டிய வரங்களை நீ அளிப்பாய்
கையில் உனக்கொரு கிளியுண்டு
அது சொன்னதை மறுபடி சொல்வதுண்டு
வேண்டினேன் செல்வத்தை உன்னைக்கண்டு
பிள்ளை செல்வத்தை நீ அளித்தாய்

௧௮.மாங்காடு காமாக்ஷி

ஊசியின் முனை மேல் நின்றவளே
உலகத்தை என்றும் காப்பவளே
சிவனுக்காக தவம் செய்தவளே
சிந்திப்பவர்க்கு வரம் தருபவளே
திடமான மனதிற்கு நீயே சாட்சி
ஓம் என்ற மந்திரத்திற்கு நீயே அடைக்கலம்
ஓடுகின்ற மனதை நிறுத்தி வைப்பவள் நீயே
ஒளி ஒலி எல்லா சக்தியும் நீயே
வணங்குகிறேன் என்றும் உன்னை அன்னையே
வழிகாட்டியாய் இருக்க வேண்டுகிறேன் உன்னையே
வாரிசை தந்து வரம் அளித்தாயே
வளமுடன் வாழ ஆசி தருவாயே

௧௭.தேவி கருமாரியம்மன்

கருமாரியம்மன் பெயரை சொன்னால் துன்பங்கள் தீருமடா
அவள் கருணையின் வடிவமடா
அன்னையே நீதான் கதியென்று சொன்னால்
அடைக்கலம் தருவாளடா
அன்றும் இன்றும் என்றும் காப்பது அந்த அன்னையே தானடா
எந்த நல்ல செயல் அனாலும் முதல் அவளை காண்போம்
எல்லாம் நலமாக நடக்க வேண்டும் என்று அவளை
வேண்டுவோம்
சிரித்த முகத்துடன் சரி என்று சொல்லி
சம்மதம் தருவாளடா
சகலமும் நலமாய் நடப்பதற்கு
வழியை காட்டுவாளடா
எங்கள் குடும்பம் என்றும் அவளுக்கு
நன்றியை செலுத்துமடா
செல்வம்,கல்வி,சௌபாக்யம் ,சந்ததி
எல்லாம் அவள் வரம் தானடா
இன்று வந்த பிள்ளை செல்வதை
தந்தவள் அவள் தானடா

௧௬கபாலீஸ்வரர் கற்பகாம்பாள்

மயிலாப்பூரிலே குடிகொண்ட சிவனே
அம்பிகையுடன் விளங்கிடும் சிவனே
குடும்பத்தினருடன் தரிசனம் தருவாய்
குறைகளைஎல்லாம் தீர்த்திடுவாய்
அன்று நான் உழைக்க சென்னைக்கு வந்தேன்
அடைக்கலம் இல்லாமல் தடுமாறினேன்
ஆதரவை தந்து அருளிய தந்தையே
அன்புடன் நன்றியை செலுத்துகிறேன்
செல்வங்கள் எத்தனை இருந்தாலும்
பிள்ளை செல்வத்துக்கு நிகராகுமா
அந்த செல்வதை அளித்தாய் அம்மைய்யப்பனே
ஆசி என்றும் அளித்து காப்பவனே

௧௫.வடபழனி முருகா

வடபழநியிலே குடிகொண்ட வேல் முருகா
வழிகாட்டியாய் வருவாய் வேல் முருகா
வந்த வினைகளை தீர்ப்பாய் வேல் முருகா
வள்ளி தெய்வயானையரை மணந்த வேல் முருகா
பழனியிலே பாலனாய் நின்ற வேல் முருகா
பரமசிவன் படைத்தவனே வேல் முருகா
பார்வதியின் செல்வ மகனே வேல் முருகா
பாதங்களில் பணிவேன் வேல் முருகா
விக்னேஸ்வரன் தம்பியே வேல் முருகா
வினைகளை எல்லாம் தீர்ப்பாய் வேல் முருகா
நீ இல்லம்வர வேண்டிக்கொள்ள வேல்முருகா
மனம் இறங்கி வந்தாய் ஐயா வேல் முருகா

Thursday, March 20, 2008

௧௪.பார்த்தசாரதி

திருவல்லிக்கேணியிலே பார்த்தசாரதி
இருக்கின்றாய் நமக்கென்றும் நீயே கதி
அமைதியை தருகின்றது உன்தன் சந்நிதி
உன்தன் அருள் என்பதே மாபெறும் நிதி
அர்ஜுனனுக்கு நீ ஆனாய் சாரதி
அன்று அவனுக்கு சொன்னாய் வாழ்கையின் நீதி
உன்தன் செயல் என்பது கடமையில் பாதி
முடிவை செய்வது என்தன் பெரும் மதி
ஆராதனை செய்து வந்தேன் உன்னை ஸ்ரீபதி
ஆதரித்து காத்தால் எனக்கு நிம்மதி
நீயே சொல்வதாய் வருவது நற்செய்தி
நன்றி சொல்வேன் அதற்கு இன்று தயாநிதி

௧௩.பகவான் பாபா

வியாழக்கிழமை மாலையிலே
புட்டபர்த்தி நகரம் செல்கையிலே
அங்கே தரிசனம் தந்தவர் யார்
அவர் தான் சாயி பாபா ஆவார்
ஷிரடியில் இருப்பவரும் அவரே
இறுதியில் அடைக்கலமும் அவரே
குழந்தைகள் உள்ளம் தான் கொண்டு
பக்தரை காக்கும் பகவான் அவரே
ஆசனத்திலே அமர்ந்திருந்து
இதழில் புன்னகை காட்டி
அபயத்தின் கரத்தை நீட்டி
அருள்வார் என்றும் காத்திருந்து
தொழுதது பரிசாய் வந்ததம்மா
அதுதான் பிள்ளை செல்வம்மம்மா
பாபா என்று சொல்கின்ற பயனாய்
பாப்பா இன்று வந்ததம்மா

௧௨.ஸ்ரீ ஸ்ரீநிவாசா

முதல் முதலாய் மலை ஏறி வந்தாள்
உன்னை காண வேங்கடேஷா
படி அளப்பவனை காண படி ஏரி வந்தாள்
என் மகள் ஸ்ரீநிவாசா
கண் குளிர கண்டு உன்னை தொழுது
இங்கு வந்தாள் ஸ்ரீநிவாசா
மன்னாதி மன்னனை மணமுடித்து
குடி கொண்டாள் ஸ்ரீநிவாசா
எத்தனை செல்வம் இருந்தாலும் பிள்ளை
செல்வம் தேவை ஸ்ரீநிவாசா
அதை நீ கருணை வைத்து அளித்தால்தான்
உண்டு ஸ்ரீநிவாசா
கருணைக்கு நேரம் எத்தனை காலம்
என்பதில்லை ஸ்ரீநிவாசா
உன் கருணை உள்ளம் அலை போல் மாறி
பொங்கியது ஸ்ரீநிவாசா
கதிரவன் ஒளிகள் ஏழு வண்ணங்களாய்
வருகிறது ஸ்ரீநிவாசா
அது இந்த இல்லத்தில் ஒளியாய் நின்று
விளங்குது ஸ்ரீ ஸ்ரீநிவாசா
அந்த கருணையின் ஒளியே குமரனாய்
வந்தது இன்று ஸ்ரீநிவாசா
மலையேறி வந்த மகளின் வாழ்வில்
மகிழ்ச்சி தந்தாய் ஸ்ரீநிவாசா

௧௨.ஸ்ரீ ஸ்ரீநிவாசா

முதல் முதலாய் மலை ஏறி வந்தாள்
உன்னை காண வேங்கடேஷா
படி அளப்பவனை காண படி ஏரி வந்தாள்
என் மகள் ஸ்ரீநிவாசா
கண் குளிர கண்டு உன்னை தொழுது
இங்கு வந்தாள் ஸ்ரீநிவாசா
மன்னாதி மன்னனை மணமுடித்து
குடி கொண்டாள் ஸ்ரீநிவாசா
எத்தனை செல்வம் இருந்தாலும் பிள்ளை
செல்வம் தேவை ஸ்ரீநிவாசா
அதை நீ கருணை வைத்து அளித்தால்தான்
உண்டு ஸ்ரீநிவாசா
கருணைக்கு நேரம் எத்தனை காலம்
என்பதில்லை ஸ்ரீநிவாசா
உன் கருணை உள்ளம் அலை போல் மாறி
பொங்கியது ஸ்ரீநிவாசா
கதிரவன் ஒளிகள் ஏழு வண்ணங்களாய்
வருகிறது ஸ்ரீநிவாசா
அது இந்த இல்லத்தில் ஒளியாய் நின்று
விளங்குது ஸ்ரீ ஸ்ரீநிவாசா
அந்த கருணையின் ஒளியே குமரனாய்
வந்தது இன்று ஸ்ரீநிவாசா
மலையேறி வந்த மகளின் வாழ்வில்
மகிழ்ச்சி தந்தாய் ஸ்ரீநிவாசா




௧௧.கலை மகள்

ஆவணியில் இருக்கும் கலைமகளே
நீ குறையை கேளாயோ
அன்னையே உன்தன் அன்பு மழையை
நம்மீது போழியாயோ
கேட்டதை கொடுக்கும் பறந்த உள்ளம்
தாயே உனக்குண்டு
அந்த உரிமையை கொண்டு உன்னை
வரம் கேட்கும் தகுதியும் எனக்குண்டு
ஒன்றும் அறியாதகாளிதாசனை
கவிஞன் ஆக்கவில்லையா
சங்கரர் உன்னை பக்தியோடு வணங்க
அவருக்கு அருளவில்லையா
அவர் விருப்பத்திற்கு இணங்கி தாயே
அவருடன் வரவில்லையா
துங்கயின் கரையில் ஸ்ரிங்கேரியிலே
அமரவில்லையா
உன்னை தொழுத இளைய மகளிர்க்கு
மணம் புரியவில்லையா
மடியினில் ஆட குழ்ந்தை செல்வம்
நீயே தரவில்லேயா
பொறுமையுடன் காத்து உன்னை வேண்டிட
இன்று பரிசை தந்தாய்
மூத்த மகளிர்க்கும் ஆனந்தம் வளர்க்க
பிள்ளை பரிசை தந்தாய்
எதற்கும் நேரம் வரவேண்டும் என்பதை
நான் அறிவேன்
அந்த அருள்கின்ற நேரம் எப்போது என்று
தாயே நான் அறியேன்
நிரந்தரம் உன்தன் திருவடி பணிந்தேன்
வரத்தை அளிதுவிட்டாய்
உன் குழ்ந்தை அவன் என்று எண்ணி
கருணை கொண்டு காப்பாய்

Wednesday, March 19, 2008

௧0.ஆவணி குருவருள்

சங்கரர் உருவமே ஆன ஆவணி
குருவை நான் பணிந்தேன்
பெரிய மகளுக்கு வாரிசு வேண்டும்
எனறு வரம் கேட்டேன்
கேட்ட வரங்களை கொடுக்கும் கல்பவ்ருக்ஷம்
எங்களுக்கவரல்லவா
கவலைபடாதே உங்கள் ஆசை நிறைவேறும்
என்ற வாக்கை அவர் அளித்தார்
ஸ்ரீ முருகனை தொழுதிட வேண்டும்
எனறு ஆணை இட்டார்
அந்த தெய்வத்தின் பிரசாதம் தினமும்
தவறாமல் அருந்த ஆணை இட்டார்
அந்த ஆசியின் பலனே இன்று இங்கே
வாரிசு வந்ததம்மா
அவர் மீது வைத்த நிறந்தர பக்திக்கு
பரிசும் கிடைததம்மா