கேரளத்தில் பிறந்து துறவரம் ஏற்று
அறிவு மேதையாய் விளங்கிய சங்கரர்
அமைதியே உருவான ஶ்ரிங்கேரியிலே
அமர்த்திய கலைமகளே வணங்குகிறேன்
நாட்டின் பல இடங்களில் குடியிருந்து
முறையான இறை தொண்டை நீ ஏற்று
பணியும் பக்தர்களை பகலிரவும் காக்கும்
பரப்ரஹ்ம மகிஷியே வணங்குகிறென்
கடமைக்காக கறை தாண்டி வந்தவர்கள்
உன் கடைக்கண் பார்வையை பெறவேண்டும்
என்று கருணைக்கொண்டு கடல் தாண்டி வந்த
கருணை கடலே வணங்குகிறேன்
கடலரசன் மகள் செல்வத்தை அளிக்கஅறிவு மகள் நீ அறிவு செல்வம் அளிக்கமுக்கண்ணன் மனைவி வலிமையை அளிக்கமுழுமையாகும் வாழ்க்கை நீ அபயம் அளிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment