ஆனந்த நகர க்ஷேத்திரத்திலே
ஆனந்தம் பொங்கும் நேரத்திலே
ஆனந்தமாய் ஆசி வழங்கும்
அனைத்து தேவதைகளையும் வணங்குகிரேன்
மாதவன் மஹாதேவன் உடனிருந்து
ஒற்றுமை காக்கும் பணிபுரிந்து
மக்களின் நன்மையை உடனறிந்து
மகிழ்ந்து காப்பார் உடனிரு‘ந்து
முதலில் வினாயகன் தானிருக்க
மும்மூர்திகள் அரசியரும் உடனிருக்க
கண்ணன் ஆண்டாளுடன் காத்திருக்க
கவலைகள் ஏது துணை இருக்க
கலியுக வரதன் அபயம் தந்தான்
ஸ்ரீராமன் , தம்பிசீதை உடனிருந்தான்
அனுமனும் அவருக்கு துணை இருந்தான்
அனைத்து சௌக்கியங்கள் அள்ளி தந்தான்
பாம்பு படுக்கையில் பள்ளிக்கொண்டான்
அமைதிக்கு வழியை காட்டுகிறான்
வள்ளிதெய்வயானையுடன் நின்ற முருகன்
வரங்களை அள்ளி தருகின்றான்
மகிஷனை கொன்ற அன்னை அவள்
மலர்ந்த முகத்துடன் நிர்கின்றாள்
மனமாற போற்றும் பக்தர்களை
மறக்காமல் முழு நேரம் காக்கின்றாள்
சபரிமலைவாசன் ஐய்யப்பன்
கணபன் கந்தன் அன்னையுடனும்
கண்களை ப்போலே காப்பவனும்
காருண்ய இதயம் கொண்டவனும்
எல்லாம் ஒன்றாய் சேர்ந்திருக்க்க
எங்கள் குறையை கேட்டிருக்க
என்றும் ‘நம்மை காத்திருக்க
சிவனும் நவக்ரஹ நாயகரும்
செல்வம் தரும் அன்னையுடன் சத்யநாராயணனும்
சத்கதி அறுள துன்பத்தின் கூட்டம்
சத்தமில்லாமல் செய்யும் ஓட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment