Wednesday, July 30, 2008

ஸ்ரீ ஸ்ரீனிவாசன்

பாலத்தில் தண்ணீர் தெரிகின்றது
அங்கு வெள்ளை கோவில் இருக்கின்றது
உடலும் உள்ளமும் செல்கின்றது
அங்கு இறைவனை காண துடிக்கின்றது
திருமலைவாசனை பார்கின்றது
உலக கவலைகளை மறைக்கின்றது
வாயில் வார்த்தை நிர்கின்றது
ஆனந்தம் கண்ணீரில் தெறிகின்றது
கைகள் பக்தியுடன் இணைகின்றது
இதயம் அமைதியை பெறுகின்றது
இறைவன் ஆசியை கேட்கின்றது
இனி வேறேதும் தேவைஇல்லை என்கின்றது
மற்ற தெய்வமும் இருக்கின்றது
ஓரே இடத்தில் அருள் கிடைக்கின்றது
கடல் தாண்டும் பக்தரையும் காக்கின்றது
கலியுக வரதனின் அன்பென்பது
அவனுக்கு தெரியாது பேதம் என்பது
அதனாலேதான் அவனை தெய்வம் என்பது
அவன் அறிந்தது ஒன்றே அருள் என்பது
அதை அடைந்தவர் வாழ்வே சுவை என்பது

No comments: