Thursday, July 31, 2008

கனவு நினைவானது.
கனவு நினைவானது இன்று கனவு நினைவானது
மனதினில் எழுந்தஆசை ஒன்று இன்று நிறைவேரியது
ஆதி சங்கரர் ஆராதனை செய்த கலைமகள் இங்கே வந்தாள் கடல் தாண்டி வந்த மக்களை காக்க இங்கே குடி கொண்டாள்
அந்த கலைமகளை காண உடலும் உள்ளமும் இன்று துடித்தது
பாரத நாட்டில் கலைமகளும் கந்தனும் இருப்பிடம் நினைவானது
கலைமகளுடன் கந்தனும் இங்கே இருந்தால் நலம் என்றது
அந்த எண்ணம் நிறைவேர இருவர் தரிசனம் இங்கே கிடைத்தது
விநாயகனை வணங்கி சங்கரரை வணங்கி கலைமகளை கண்டது நெஞ்சம்
அன்னையை வணங்கி கந்தன் தந்தையை வணங்கி குமரனை கண்டது நெஞ்சம்
நினைத்ததை நடத்தி வைத்தாய் என்று கந்தனை வணங்கியது மனம்
நான் நினைத்ததல்லாமல் நீ நினைத்ததை கொடுப்பாய் கந்தா என்றது
மகிஷனை வதைத்த அன்னையை கண்டு ஆனந்தம் பொங்கியது
இன்னல்கள் தீற்க்கும் நவக்ரஹ நாயகர் ஆஸ்சியையும் பெற்றது
கலைமகள் கருணை கந்தனின் அருள் கிடைத்தாலே போதும்
பிள்ளையார் குரு சங்கரர் உடனிறுக்க சௌபாக்யம் பொங்கி வரும்
ச்ருங்கேரி ஆசாரியார் தனக்கு வைத்த பெயர் அன்னை பவானீ
சீறும் செல்வமும் அயுள் நலமும் தன்து மக்களை நீ

No comments: