Wednesday, March 19, 2008

௧0.ஆவணி குருவருள்

சங்கரர் உருவமே ஆன ஆவணி
குருவை நான் பணிந்தேன்
பெரிய மகளுக்கு வாரிசு வேண்டும்
எனறு வரம் கேட்டேன்
கேட்ட வரங்களை கொடுக்கும் கல்பவ்ருக்ஷம்
எங்களுக்கவரல்லவா
கவலைபடாதே உங்கள் ஆசை நிறைவேறும்
என்ற வாக்கை அவர் அளித்தார்
ஸ்ரீ முருகனை தொழுதிட வேண்டும்
எனறு ஆணை இட்டார்
அந்த தெய்வத்தின் பிரசாதம் தினமும்
தவறாமல் அருந்த ஆணை இட்டார்
அந்த ஆசியின் பலனே இன்று இங்கே
வாரிசு வந்ததம்மா
அவர் மீது வைத்த நிறந்தர பக்திக்கு
பரிசும் கிடைததம்மா

No comments: