Thursday, March 20, 2008

௧௪.பார்த்தசாரதி

திருவல்லிக்கேணியிலே பார்த்தசாரதி
இருக்கின்றாய் நமக்கென்றும் நீயே கதி
அமைதியை தருகின்றது உன்தன் சந்நிதி
உன்தன் அருள் என்பதே மாபெறும் நிதி
அர்ஜுனனுக்கு நீ ஆனாய் சாரதி
அன்று அவனுக்கு சொன்னாய் வாழ்கையின் நீதி
உன்தன் செயல் என்பது கடமையில் பாதி
முடிவை செய்வது என்தன் பெரும் மதி
ஆராதனை செய்து வந்தேன் உன்னை ஸ்ரீபதி
ஆதரித்து காத்தால் எனக்கு நிம்மதி
நீயே சொல்வதாய் வருவது நற்செய்தி
நன்றி சொல்வேன் அதற்கு இன்று தயாநிதி

No comments: