கிருஷ்ணனின் சோதரனே வேல் முருகா
கமலக்கண்ணனே வேல் முருகா
ரமணீய ரூபம் கொண்ட வேல் முருகா
ராஜாதிராஜனே வேல் முருகா
மணிகண்டன் சோதரனே வேல் முருகா
கீத பிரியனே வேல்முருகா
ராமனின் தம்பியே வேல் முருகா
சுபமான வரங்கள் அளிக்கும் வேல் முருகா
ரிஷி முனிகள் போற்றும் வேல் முருகா
ஜெயத்தை அள்ளித்தரும் வேல் முருகா
அசோகத்தின் உருவமே வேல் முருகா
அஜேய வீரனே வேல் முருகா
லாவண்ய ரூபனே வேல் முருகா
ஆதித்ய தேஜனே வேல்முருகா
அருணகிரிநாதர் போற்றும் வேல் முருகா
கிரிஜையின் புதல்வனே வேல் முருகா
சித்திகள் அர்த்தம் நீயே வேல் முருகா
சத்தியத்தின் பொருளே வேல் முருகா
சாரதியும் நீயே வேல் முருகா
எழுதிய பாடலெல்லாம் வேல் முருகா
உன்தன் கருணையின் வரமே வேல் முருகா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment