சக்தி என்ற பெண் ஒருத்தி எங்கள் வீட்டில் இருந்தாள்
சிறந்த அன்பு அறிவு பண்பு நற்குணம் பெற்றிருந்தாள்
எந்தன் பெண்ணின் தோழியாக அவள் கூட இருந்தாள்
மனதினிலே மறக்காத நட்பின் கொடியை வளர்த்தாள்
உச்சி பிள்ளையார் இருக்கும் ஊரிலிரிந்து வந்தாள்
சமயப்புரத்து அம்மனைப்போல் சமயத்திற்கு விலை தந்தாள்
உறங்கும் ரங்கனாதனைப்போல் அமைதி கொண்டாள்
தண்ணீர் நடுவில் இருக்கும் சிவனை ப்போல் சாந்தம் கொண்டாள்
அவள் இன்று மணந்து வாழ கடலை தாண்டி வந்தாள்
முருகுன் இருக்கும் இடத்தினிலேயே தானும் குடி கொண்டாள்
என் மகளும் அவளை காண அன்று விரைந்து சென்றாள்
அங்கு இருக்கம் முருகன் அருளால் மகளும் தாய்மை கொண்டாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment