Friday, March 21, 2008

௧௮.மாங்காடு காமாக்ஷி

ஊசியின் முனை மேல் நின்றவளே
உலகத்தை என்றும் காப்பவளே
சிவனுக்காக தவம் செய்தவளே
சிந்திப்பவர்க்கு வரம் தருபவளே
திடமான மனதிற்கு நீயே சாட்சி
ஓம் என்ற மந்திரத்திற்கு நீயே அடைக்கலம்
ஓடுகின்ற மனதை நிறுத்தி வைப்பவள் நீயே
ஒளி ஒலி எல்லா சக்தியும் நீயே
வணங்குகிறேன் என்றும் உன்னை அன்னையே
வழிகாட்டியாய் இருக்க வேண்டுகிறேன் உன்னையே
வாரிசை தந்து வரம் அளித்தாயே
வளமுடன் வாழ ஆசி தருவாயே

No comments: