Thursday, March 20, 2008

௧௧.கலை மகள்

ஆவணியில் இருக்கும் கலைமகளே
நீ குறையை கேளாயோ
அன்னையே உன்தன் அன்பு மழையை
நம்மீது போழியாயோ
கேட்டதை கொடுக்கும் பறந்த உள்ளம்
தாயே உனக்குண்டு
அந்த உரிமையை கொண்டு உன்னை
வரம் கேட்கும் தகுதியும் எனக்குண்டு
ஒன்றும் அறியாதகாளிதாசனை
கவிஞன் ஆக்கவில்லையா
சங்கரர் உன்னை பக்தியோடு வணங்க
அவருக்கு அருளவில்லையா
அவர் விருப்பத்திற்கு இணங்கி தாயே
அவருடன் வரவில்லையா
துங்கயின் கரையில் ஸ்ரிங்கேரியிலே
அமரவில்லையா
உன்னை தொழுத இளைய மகளிர்க்கு
மணம் புரியவில்லையா
மடியினில் ஆட குழ்ந்தை செல்வம்
நீயே தரவில்லேயா
பொறுமையுடன் காத்து உன்னை வேண்டிட
இன்று பரிசை தந்தாய்
மூத்த மகளிர்க்கும் ஆனந்தம் வளர்க்க
பிள்ளை பரிசை தந்தாய்
எதற்கும் நேரம் வரவேண்டும் என்பதை
நான் அறிவேன்
அந்த அருள்கின்ற நேரம் எப்போது என்று
தாயே நான் அறியேன்
நிரந்தரம் உன்தன் திருவடி பணிந்தேன்
வரத்தை அளிதுவிட்டாய்
உன் குழ்ந்தை அவன் என்று எண்ணி
கருணை கொண்டு காப்பாய்

No comments: