வழிகாட்டியாய் வருவாய் வேல் முருகா
வந்த வினைகளை தீர்ப்பாய் வேல் முருகா
வள்ளி தெய்வயானையரை மணந்த வேல் முருகா
பழனியிலே பாலனாய் நின்ற வேல் முருகா
பரமசிவன் படைத்தவனே வேல் முருகா
பார்வதியின் செல்வ மகனே வேல் முருகா
பாதங்களில் பணிவேன் வேல் முருகா
விக்னேஸ்வரன் தம்பியே வேல் முருகா
வினைகளை எல்லாம் தீர்ப்பாய் வேல் முருகா
நீ இல்லம்வர வேண்டிக்கொள்ள வேல்முருகா
மனம் இறங்கி வந்தாய் ஐயா வேல் முருகா
No comments:
Post a Comment