மயிலாப்பூரிலே குடிகொண்ட சிவனே
அம்பிகையுடன் விளங்கிடும் சிவனே
குடும்பத்தினருடன் தரிசனம் தருவாய்
குறைகளைஎல்லாம் தீர்த்திடுவாய்
அன்று நான் உழைக்க சென்னைக்கு வந்தேன்
அடைக்கலம் இல்லாமல் தடுமாறினேன்
ஆதரவை தந்து அருளிய தந்தையே
அன்புடன் நன்றியை செலுத்துகிறேன்
செல்வங்கள் எத்தனை இருந்தாலும்
பிள்ளை செல்வத்துக்கு நிகராகுமா
அந்த செல்வதை அளித்தாய் அம்மைய்யப்பனே
ஆசி என்றும் அளித்து காப்பவனே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment