Thursday, March 20, 2008

௧௩.பகவான் பாபா

வியாழக்கிழமை மாலையிலே
புட்டபர்த்தி நகரம் செல்கையிலே
அங்கே தரிசனம் தந்தவர் யார்
அவர் தான் சாயி பாபா ஆவார்
ஷிரடியில் இருப்பவரும் அவரே
இறுதியில் அடைக்கலமும் அவரே
குழந்தைகள் உள்ளம் தான் கொண்டு
பக்தரை காக்கும் பகவான் அவரே
ஆசனத்திலே அமர்ந்திருந்து
இதழில் புன்னகை காட்டி
அபயத்தின் கரத்தை நீட்டி
அருள்வார் என்றும் காத்திருந்து
தொழுதது பரிசாய் வந்ததம்மா
அதுதான் பிள்ளை செல்வம்மம்மா
பாபா என்று சொல்கின்ற பயனாய்
பாப்பா இன்று வந்ததம்மா

No comments: