Friday, March 21, 2008

௧௭.தேவி கருமாரியம்மன்

கருமாரியம்மன் பெயரை சொன்னால் துன்பங்கள் தீருமடா
அவள் கருணையின் வடிவமடா
அன்னையே நீதான் கதியென்று சொன்னால்
அடைக்கலம் தருவாளடா
அன்றும் இன்றும் என்றும் காப்பது அந்த அன்னையே தானடா
எந்த நல்ல செயல் அனாலும் முதல் அவளை காண்போம்
எல்லாம் நலமாக நடக்க வேண்டும் என்று அவளை
வேண்டுவோம்
சிரித்த முகத்துடன் சரி என்று சொல்லி
சம்மதம் தருவாளடா
சகலமும் நலமாய் நடப்பதற்கு
வழியை காட்டுவாளடா
எங்கள் குடும்பம் என்றும் அவளுக்கு
நன்றியை செலுத்துமடா
செல்வம்,கல்வி,சௌபாக்யம் ,சந்ததி
எல்லாம் அவள் வரம் தானடா
இன்று வந்த பிள்ளை செல்வதை
தந்தவள் அவள் தானடா

No comments: