Saturday, March 22, 2008

விக்னேச்வரா

மலைமேல் குடிகொண்ட விக்னேச்வரா
மன்னித்து காப்பவனே விக்னேச்வரா
மனதினில் நின்று விட்டாய் விக்னேச்வரா
மலர்களினால் பூஜை செய்வேன் விக்னேச்வரா
ஏறுவது கஷ்டம் விக்னேச்வரா
ஏக்கம் ஒன்று இருந்தால் போதும் விக்னேச்வாரா
ஏற்றி வைப்பது கடமை விக்னேச்வரா
ஏறி வந்து பணிவேன் ஐயா விக்னேச்வரா
எங்கள் குலத்து விளக்கை ஏற்ற விக்னேச்வரா
ஏங்கி வேண்டி வந்தோமே விக்னேச்வரா
ஏற்றுக்கொண்டாய்விண்ணப்பத்தை விக்னேச்வரா
ஏற்றுக்கொண்டு நன்றி சொல்வோம் விக்னேச்வரா

No comments: