முதல் முதலாய் மலை ஏறி வந்தாள்
உன்னை காண வேங்கடேஷா
படி அளப்பவனை காண படி ஏரி வந்தாள்
என் மகள் ஸ்ரீநிவாசா
கண் குளிர கண்டு உன்னை தொழுது
இங்கு வந்தாள் ஸ்ரீநிவாசா
மன்னாதி மன்னனை மணமுடித்து
குடி கொண்டாள் ஸ்ரீநிவாசா
எத்தனை செல்வம் இருந்தாலும் பிள்ளை
செல்வம் தேவை ஸ்ரீநிவாசா
அதை நீ கருணை வைத்து அளித்தால்தான்
உண்டு ஸ்ரீநிவாசா
கருணைக்கு நேரம் எத்தனை காலம்
என்பதில்லை ஸ்ரீநிவாசா
உன் கருணை உள்ளம் அலை போல் மாறி
பொங்கியது ஸ்ரீநிவாசா
கதிரவன் ஒளிகள் ஏழு வண்ணங்களாய்
வருகிறது ஸ்ரீநிவாசா
அது இந்த இல்லத்தில் ஒளியாய் நின்று
விளங்குது ஸ்ரீ ஸ்ரீநிவாசா
அந்த கருணையின் ஒளியே குமரனாய்
வந்தது இன்று ஸ்ரீநிவாசா
மலையேறி வந்த மகளின் வாழ்வில்
மகிழ்ச்சி தந்தாய் ஸ்ரீநிவாசா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment