சுந்தரேச்வறரை மணந்தவளே
சுந்தர நகரத்தில் நிற்பவளே
சுத்தமான தவத்திற்கு அருள்பவளே
சுலபமாய் வரத்தை கொடுப்பவளே
எத்தனை பெரியது உன் கோவில்
எத்தனை பெரியது உன் உள்ளம்
அத்தனை பக்தர்களையும் வரவேற்பாய்
வேண்டிய வரங்களை நீ அளிப்பாய்
கையில் உனக்கொரு கிளியுண்டு
அது சொன்னதை மறுபடி சொல்வதுண்டு
வேண்டினேன் செல்வத்தை உன்னைக்கண்டு
பிள்ளை செல்வத்தை நீ அளித்தாய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment