Tuesday, March 18, 2008

3. ஸ்ரீ.குருவாயூரப்பா

குருவாயூரில் நின்றவனே
குறைகளை எல்லாம் தீர்ப்பவனே
கேட்ட வரங்களை கொடுப்பவனே
குருவாயூரப்பா உன்னை வணங்குகின்றேன்
அன்று முதல் செய்த தொண்டை
இன்று அன்புடன் ஏற்றாயோ
தாமதம் போதும் என்று நினைத்து
பிள்ளை செல்வத்தை அளித்தாயோ
உன் அருளால் ஒளி வரவேண்டும்
பெயரும் புகழும் பெற வேண்டும்
உன்தன் நிழலில் வாழ வேண்டும்
உயர்ந்த புகழை பெறவேண்டும்

No comments: