Tuesday, March 18, 2008

௪.ஆலயிலை கண்ணன்

உலகமெல்லாம் அழியும் நேரம்
பிரளயம் வந்தது
உலகமெல்லாம் கண்ணா உன்தன்
உடலில் நின்றது
ஆலமரத்து இலையினிலே
உருவம் தெரிந்தது
வலது காலின் கட்டை விரல்
வாயில் தெரிந்தது
அந்த காட்சி இன்று எங்கள்
கண்முன் வந்தது
கண்ணா நீயே வருவாய் என்று
உறுதி ஆனது
இரண்டு குடும்பங்கள் செய்த வேண்டுதல்
உனக்கு கேட்டது
கந்தா கண்ணா உன்னை வரவேற்க
இதயம் துடித்தது

No comments: