Wednesday, March 19, 2008

௮,எங்கள் செல்வி

சுபமான எண்ணத்துடன் கடல் தாண்டி சென்றாள்
அறிவோடு விளங்கி புகழ் தன்னை பெற்றாள்
அங்கேயே தான் விரும்பும் கணவனையும் பெற்றாள்
மன்னாதி மன்னனோடு மனைவியாக திகழ்ந்தாள்
குருவாயூரின் கண்ணன் எங்கள் எதிரே வந்தான்
திருமணம் அங்கே தான் நடக்கவேண்டும் என்றான்
சிறப்பாக மணமுடித்து இருவரையும் சேர்த்தான்
இல்லறத்தில் வாழ ஆசியையும் கொடுத்தான்
நான் இங்கு குடிகொள்ள வருவேனே என்றான்
ஆனந்த செய்தியை எல்லோர்க்கும் அளித்தான்
அவன் வரவை காத்திருந்து ஏங்கியது நெஞ்சம்
வந்துவிட்டால் ஏக்கம் அது குறைந்துவிடும் கொஞ்சம்

No comments: