Tuesday, March 18, 2008

௬,அன்னை பகவதியே

கருணையின் வடிவாய் நின்றவளே
கேட்ட வரங்களை தருபவளே
கவலைகள் எல்லாம் தீர்ப்பவளே
கேரள நாட்டை காப்பவளே
அன்னையே அன்று உன்னை கண்டோம்
ஆனந்தம் என்னும் கடலில் நீந்தினோம்
அடைக்கலம் நீயே என்று சொன்னோம்
அளவில்லா பரிசை உன்னை கேட்டோம்
அன்னையே அதை தர முடிவு செய்தாய்
இன்று கருணையுடன் அளித்துவிட்டாய்
பெயருக்கு தான் அவன் நம் பிள்ளை
காலமெல்லாம் கட்டிக்காக்க அவன் உன் பிள்ளை

No comments: